Friday, October 16, 2015

Computer Informaions

தொலைக்காட்சி பிரியர்களுக்கு உதவும் சம்சுங்கின் புதிய அப்பிளிக்கேஷன்:

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஸ்மார்ட் கைப்பேசிகளைக் கொண்டே அதிகளவான மனித செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதற்காக அன்றாடம் பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனம் SleepSense எனும் புதிய அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இரவு நேரங்களில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கையில் நித்திரைக்கு செல்லும் நேரங்களை அறிந்து குறித்த நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை தானாகவே நிறுத்திக்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது மொத்தமாக நித்திரை செய்யும் நேரம், தூக்கத்தின் திறன், நித்திரை செல்ல எடுக்கும் நேரம், நித்திரையில் இருந்து விழிக்கும் தடவைகள், படுக்கையை விட்டு அகலும் தடவைகள், கண்ணிண் அசைவுகள் மற்றும் ஆழ்நித்திரையின் சதவீதம் என்ற 7 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்துவதற்கான நேரத்தை துல்லியமாகக் கணிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Computer Informations

Face Bookல் இனி மற்றவர்களின் வீடியோக்களை திருடி பதிவேற்ற முடியாது:

ஃபேஸ்புக்கில் இனி மற்றவர்கள் வடிவமைத்த வீடியோக்களை நம் ப்ரொஃபைலில் பதிவேற்றம் செய்து லைக் மற்றும் ஷேர்களை பெற இயலாது. காரணம் ’video-matching tool' என்னும் பிரத்யேக அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்கில், ஒரு பயனர் பதிவேற்றம் செய்த விடியோ, அந்நபரின் அனுமதியின்றி மற்றவர்கள் அவர்களின் சொந்த வீடியோ போன்று பதிவேற்றம் செய்து லைக்ஸ் வாங்குவது வழக்கமாகிவிட்டது. வீடியோ படைப்பாளிகள், அவர்களின் விடியோக்கள் திருடப்படுவதாக ஃபேஸ்புக்கில் புகார் தெரிவித்து வந்ததை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் விடியோக்கள் திருடப்படுவதை தடுக்கும் ’video-matching tool' என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது. 

இந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக வீடியோவை வடிவமைத்தவர்கள், தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதை கண்டறிய முடியும். அவ்வாறு திருடப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதை நீக்கிவிட முடியும்.

தற்போது யூ-ட்யூபில் ஒரு பயனரின் வீடியோ, அவரின் அனுமதியின்றி மற்றொருவர் பதிவேற்றம் செய்திருந்தால், கூகுள் தானாக அந்த வீடியோவை நீக்கி, அதை பதிவேற்றியவருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிவிடும். ஆனால் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ள விடியோ மேட்சிங் மூலம், வீடியோவின் உரிமையாளர்களே தங்கள் வீடியோக்கள் திருடப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Computer Informations

ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை எளிமையாக சரி செய்வது எப்படி:

எந்த ஒரு பொருளும் புதிதாக வாங்கும் போது கொஞ்சம் தயக்கம் மற்றும் குழப்பம் இருக்க தான் செய்யும், ஆனால் குறிப்பிட்ட பொருள் பயன்படுத்த துவங்கி அது பழகி போனால் நிலைமை முற்றிலும் மாறி விடும்.
அப்படி இருக்க ஸ்மார்ட்போன் மட்டும் விதி விலக்கா என்ன, தினசரி வாழ்வில் இன்றியமையாத கருவியாக இடம் பிடித்திருக்கும் ஸ்மார்ட்போன் உடைந்தாலோ அல்லது வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலோ உடனடியாக சரி செய்வது எப்படி என்பதை கீழ பாருங்கள்..

ஸ்கிரீன்

திரையில் க்ராக் ஏற்பட்டு விட்டதா, வெள்ளை நிற பற்பசை (பேஸ்ட்) பயன்படுத்தி அதனை சரி செய்யலாம். மீதம் இருக்கும் பற்பசையை சுத்தமான துணியை கொண்டு நீக்கி விடலாம்.

அப்பச்சோடா

இரு மடங்கு சோடாவில் ஒரு பங்கு நீர் சேர்த்து பசை பதத்திற்கு வரும் வரை பிசைந்து, இக்கலவையை மைக்ரோஃபைபர் துணியில் சிறிதளவு வைத்து திரையில் ஏற்பட்டிருக்கும் ஸ்க்ராட்ச் பகுதியில் வட்ட வடிவில் துடைக்க வேண்டும்.

உப்பு காகிதம்

போனில் ஸ்க்ராட்ச் ஆன இடங்களில் உப்பு காகிதத்தை கொண்டு மென்மையாக துடைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஃபெவி க்விக்

போனின் ப்ளாஸ்டிக் பகுதிகளில் ஏதும் ஸ்க்ராட்ச் அல்லது பிளவு ஏற்பட்டால் ஃபெவி க்விக் பயன்படுத்தி அவைகளை ஒட்டி கொள்ளலாம்.

வெயில்

போன் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது மழையில் நனைந்தாலோ அதனினை கழற்றி வெயிலில் காய வைக்க வேண்டும்.

சார்ஜர்

போன் ஈரமாக இருக்கும் போது அதனினை சார்ஜரில் போடவே கூடாது.

அரிசி

காய வைத்த பின் அதனினை வேகாத அரிசியில் புதைத்து வைத்தால் அதனுள் இருக்கும் நீர் துளிகளை அரிசி ஈர்த்து கொள்ளும்.

டிரையர்

எக்காரணத்தை கொண்டும் நீரில் விழுந்த போனினை டிரையர் அல்லது ப்ளோயர் கொண்டு காற்றின் மூலம் நீரை அகற்ற கூடாது. இவ்வாறு செய்யும் போது போனின் உள்பாகங்களில் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

ஜாக்

போனின் ஹெட்போன் ஜேக் சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ்களை பயன்படுத்தலாம்.

Computer Informations

வாட்ஸ் அப் பயன் படுத்துபவர்களின் தகவல் திருடு போக வாய்ப்பு:

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ் அப் பாவனையாளர்களின் தகவல்கள் திருட்டுப் போகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இச் சேவையினை மொபைல் சாதனங்களின் ஊடாகவும், இணைய உலாவியின் ஊடாகவும் பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே.

இவற்றுள் இணையத்தினூடாக வாட்ஸ் அப் சேவையினைப் பெற்றுவரும் சுமார் 200 மில்லியன் வரையான பயனர்களே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்களால் பரவ விடப்பட்டுள்ள மல்வேரே இவ் அச்சுறுத்தலுக்கு காரணம் எனவும், இது மொபைல் அப்பிளிக்கேஷன்களை தாக்காது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இவ் அச்சுறுத்தல் தொடர்பாக வாட்ஸ் அப் சேவை கடந்த மாதத்தின் இறுதி தினங்களில் எச்சரிப்புக்குள்ளாகியிருந்தது.

இதேவேளை குறித்த பாதிப்பிலிருந்து தப்பிக்கொள்வதற்கு ஏனையவர்களும் உடனடியாக தமது வாட்ஸ் அப் மென்பொருளினை அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Computer Informations

விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?

கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.
இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. 

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் இந்த இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack – LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.

இது உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும் போது கீழே உள்ளது போல வரும்.

இதில் Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.
இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து “Apply display language to welcome screen and system accounts” என்பதை கிளிக் செய்து “Change Display Lanugage” என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

தமிழில் ஸ்டார்ட் மெனு
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் “விசைப்பலகைகளும் மொழிகளும்” என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும்என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.
 




Computer Informations

எச்சரிக்கை பதிவு பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை உஷார்!

ஒரு சில பதிவுகள் நம்முடைய பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.அதிலும் இந்த பதிவிற்கு "1 என கமெண்ட் செய்யுங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்று வாசகங்கள் தாங்கிய இணைப்புகளை அதிகம் பார்த்திருக்கிறீர்கள்.

நீங்களும் ஆர்வத்தில் லைக் மற்றும் கமெண்ட் பொத்தான்களை கிளிக் செய்வீர்கள். ஆனால் எதும் நடக்காது. பின்னர் தான் நீங்கள் இது ஏமாற்று வேலை என்று உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை:


ஆனால் நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும்.
நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங்கள் நண்பர்களின் டைம்லைனிலும் தோன்றும் அவர்களும் இதை முயற்சி செய்து பார்ப்பார்கள்.
இது மட்டுமல்லாது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமான பதிவுகளும் உலா வருகிறது.

"என்னுடைய சகோதரிக்கு இதயத்தில் புற்றுநோய், எனது தோழிக்கு கேன்சர், உதவுங்கள்!" என்ற வாசகத்தோடும், மருத்துவமனையில் இருக்கும் ஒரு பெண்ணின் படமும் இருப்பது போன்றும் பதிவுகள் அடிக்கடி வரும்.
இதற்கான காரணங்கள் என்ன?

அதிகப்படியான லைக் மற்றும் கமெண்டுகளை மையமாக வைத்தே ஃபேஸ்புக்கின் நிரலாக்கம் அமைந்திருக்கிறது. இதனாலே ஃபேஸ்புக்கும் இது போன்ற பதிவுகளை பிரபலப்படுத்தும். இதனால் இத்தகைய பதிவுகள் அதிகரிக்கின்றன.

ஃபேஸ்புக்கில் ஒரு பக்கமோ, பதிவோ அதிகப்படியான லைக்குகள் பெற்றால் அதில் எவ்வித நிதி சம்பந்தமான பயனும் இல்லை. எனவே இது போன்ற ஏமாற்று வேலைகளை நம்பி இருக்க வேண்டாம்.

Computer Informations:

கூகுள் டாக்ஸில் புதிய வசதி:

இணையம் வழியே டைப் செய்து ஆவணங்களை உருவாக்கிக்கொள்ள உதவும் கூகுள் டாக்ஸ் சேவையில் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. வாய்ஸ் டைபிங் எனப்படும் குரல் வழி டைப் வசதிதான் அது. ஆக, இனி கூகுள் டாக்சில் டைப் செய்ய வேண்டும் என்றில்லை; டைப் செய்ய வேண்டிய வாசகங்களை வாய் மூலமாக டிக்டேட் செய்தாலே போதுமானது.

இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள குரோம் பிரவுசரின் செட்டிங் பகுதிக்குச் சென்று வாய்ஸ் டைப்பிங் அம்சத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு பேசத் தொடங்கினால் போதும் எழுத்துக்கள் தானாக டைப் ஆகும்.

இது தவிர ஆவணங்களிலிருந்து தொடர்புடைய தகவல்களைத் தேடும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. குரல் வழி டைப்பிங்கைப் பொறுத்தவரை ஆங்கிலம் உள்ளிட்ட 40 மொழிகளில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. இந்திய மொழிகளில் இந்தி இடம்பெற்றுள்ளது. தமிழை விரைவில் எதிர்பார்க்கலாமா?

வாய்ஸ் டைப்பிங் பற்றி அறிய: https://support.google.com/docs/answer/4492226…