Friday, October 16, 2015

Computer Informations

இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

மென்பொருட்களை நிறுவும் போது நாம் கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம்.

1. Belarc Advisor (http://www.belarc.com/free_download.html)

சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த மென்பொருள் என்றால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த வித விளம்பரங்களும், டூல் பார்களும் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் எல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்களையும் இது கண்டுபிடித்து தரும். அத்தோடு அந்த மென்பொருட்களின் தற்போதைய Version, Security Update இன்ஸ்டால் செய்ய வேண்டி இருப்பின் அந்த தகவல்கள் என பலவற்றை தரும்.
2. Magical Jelly Bean Keyfinder (http://www.magicaljellybean.com/keyfinder/)

இந்த மென்பொருளும் உங்கள் மென்பொருட்களின் Serial Number – களை கண்டுபிடித்து தரும். மிக எளிதாக கண்டுபிடித்து Text File ஆக நீங்கள் சேமித்துக் கொள்ளலாம்.

மற்ற சில மென்பொருட்களை கீழே காணலாம்.
3. Winkeyfinder (http://www.winkeyfinder.com/download/winkeyfinder/)
4. Keyfinder Thing (http://dw.com.com/redir…)
5. LicenseCrawler (http://www.klinzmann.name/licensecrawler_download.htm)
6. ProduKey (http://www.nirsoft.net/utils/product_cd_key_viewer.html)
7. Product Key Finder (http://download.cnet.com/Product-…/3000-2094_4-10694022.html)
8. Product Key Finder (OTT Solutions) (http://www.ottsolutions.com/products.htm)
9. WinGuggle (http://dw.com.com/redir…)
10. RockXP (http://www.majorgeeks.com/files/details/rockxp.html)

Computer Informations

iPhone உபயோகிப்பவர்களுக்கு இணையத்தளத்தில் WhatsApp இனை பயன்படும்தும் வசதி:

விரைவான குறுஞ்செய்திகளை அனுப்புதல் உட்பட வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைத் தரும் WhatsApp சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஒவ்வொரு வகையான மொபைல் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.

இவ்வாறிருக்கையில் iOS சாதன பாவனையாளர்கள் WhatsApp சேவையினை நேரடியாக இணைய உலாவியின் ஊடாக இணையத்தளம் மூலம் பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக்கினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச் சேவையினை இணையத்தளத்தில் பயன்படுத்தும் வசதி Android, BlackBerry மற்றும் Windows Phone ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு இவ் வருட ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் iOS சாதனங்களுக்காக பல மாதங்களின் பின்னர் தற்போது குறித்த வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வசதியினைப் பெறுவதற்கு https://web.whatsapp.com/ எனும் இணைய முகவரிக்கு சென்று தரப்பட்டுள்ள QR Code இனை ஸ்கான் செய்துகொள்ள வேண்டும்.

Computer Informations

யூட்யூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..?

இண்டர்நெட் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் இன்று யாரும் தொழில் அதிபர் தான், இண்டர்நெட் மூலம் இன்று எதையும் செய்ய முடியும் என்றாகிவிட்ட போது பணம் சம்பாதிப்பது மட்டும் கடினமா என்ன.. குழம்ப வேண்டாம் இண்டர்நெட் மூலம் பணக்காரர் ஆவது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் அறிந்து கொள்ள போகின்றீர்கள். அதாவது கூகுளின் யூட்யூப் இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பாருங்கள்..

அதிக சிரமம் இல்லாமல் சரியான உழைப்பு, புத்திசாலித்தனத்தை முதலீடாக கொண்டு அதிக வருமானம் பெற யூட்யூப் சேனல் சிறப்பான தேர்வாக இருக்கும்.

கூகுள் அல்லது யூட்யூப் அக்கவுன்(http://www.wikihow.com/Make-a-YouTube-Account)ட் துவங்கி புதிய சேனல் துவங்க வேண்டும். துவங்கும் போது யூஸர் பெயரை பிரபலமானதாகவும், பலரும் விரும்பும் ஒன்றாகவும் இருந்தால் நல்லது
.
அதிக தரம் கொண்ட வீடியோக்களை உங்களது சேனலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது அதிகளவிலான மக்கள் உங்களது சேனலை பின் தொடர்வார்கள்.

அதிக பார்வையாளர்களை பெற்று மானிடைசேஷனினை அதிகரிக்க வேண்டும். உங்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் முடிந்த வரை பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

முடிந்த வரை பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கும்.

உங்களது சேனலின் மூலம் பணம் சம்பாதிக்க மானிடைசேஷனினை எனேபிள் செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால் யூட்யூப் விளம்பரங்கள் உங்களது வீடியோக்களில் வழங்கப்படும். இதோடு உங்களது வீடியோ முழுக்க முழுக்க உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பதும் அவசியமாகும்.
வீடியோக்களை பதிவேற்றம் செய்தவுடன் வீடியோ மேனேஜர் சென்று உங்களுக்கு மானிட்டைஸ் செய்ய வேண்டிய வீடியோவில் '"Monetize with Ads" பட்டனை க்ளிக் செய்து மானிடைஸ் வித் ஆட்ஸ் என்ற ஆப்ஷனில் சரி பார்க்க வேண்டும்.

ஆட் சென்ஸ் இணையதளத்திற்கு சென்று கூகுள் ஆட் சென்ஸ் செட் செய்து கொள்ளலாம். சைன் அப் நௌ பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கான அக்கவுண்டினை துவங்க வேண்டும்.

கூகுள் ஆட் சென்ஸ் பெற உங்களது வயது 18 மற்றும் அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும், பேபால் அல்லது வங்கி கணக்கு மற்றும் தகுந்த மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும்.

ஆட் க்ளிக் எனப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் க்ளிக் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்ப கட்டணம் உங்களது வங்கி கணக்கில் போடப்படும்.

மானிடைஸ் செய்யப்பட்ட வீடியோ உங்களிடம் இருந்தால் உங்களது வீடியோ எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை அனாலடிக்ஸ் மூலம் தெரிந்து கொள்ள முடியும், இங்கு உங்களுக்கு வர இருக்கும் பணம், செயல்பாடு, வீடியோக்களின் பார்வை எண்ணிக்கை போன்றவைகளை பார்க்க முடியும்.
யூட்யூப் தளத்தில் பங்குதாரர் ஆவதன் மூலம் அதிக சலுகைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சில யோசனைகளை பெற முடியும், இதை பெற அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

Computer Informations

PDF File-களை Firefox-இல் ஓபன் செய்வது எப்படி?

பெரும்பாலோனோர் படிக்க எளிதாய் இருக்க தங்களது கோப்புகளை PDF Format-இல் வைத்து இருப்பார்கள். ஆனால் ஏதேனும் புதிய கணினி அல்லது PDF Reader இல்லாத கணினிகளில் அவற்றை திறக்க முடியாமல் சிரமப்படுவார்கள். உங்களிடம் Firfox Browser இருந்தால் இனி நீங்கள் எளிதாக அதில் PDF File – ஐ ஓபன் செய்யலாம்.

1. இதற்கு நீங்கள் புதிய Firfox Version -ஐ பயன்படுத்த வேண்டும். உங்களுடைய Version- ஐ பார்க்க Help >> About Firefox. என்பதில் அறியலாம். தற்போதைய புதிய பதிப்பு 15.0. புதிய ஒன்றை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் – Mozilla Firefox (http://www.mozilla.org/en-US/firefox/new/)

2. இப்போது URL Address Bar- இல் “about:config” என்று Type செய்து enter கொடுங்கள். இப்போது வரும் பகுதியில் “I’ll be careful, I Promise !” என்பதை கிளிக் செய்து விடுங்கள்.

3. இப்போது வரும் பக்கத்தில் Search வசதி இருக்கும். அதில் “browser.preferences.inContent” என்பதை தேடவும். Result வந்த உடன் அதில் Right Click செய்து Toggle என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்போது Status என்பது Default என்பதில் இருந்து User Set க்கும், Value என்பது False என்பதில் இருந்து True என ஆகி இருக்கும்.

5. அடுத்து “pdfjs.disabled” என்பதை தேடவும். Result வந்த உடன் அதில் Right Click செய்து Toggle என்பதை கிளிக் செய்யுங்கள்.

6. இப்போது Status என்பது Default என்பதில் இருந்து User Set க்கும், Value என்பது True என்பதில் இருந்து False என ஆகி இருக்கும்.

7. அவ்வளவு தான் இனி PDF File -களை எளிதாக ஓபன் செய்து படிக்கலாம்.

Computer Informations

Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
 
நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே.

Portable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk போன்ற ஏதாவது ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

இவற்றின் பெரிய பலன் என்னவென்றால் சில கணினிகளில் உங்களுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் Access இல்லாமல் இருக்கலாம், அல்லது அந்த மென்பொருள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சோதனைக்கு மட்டும் நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்த வேண்டி இருக்கும், ப்ரௌசிங் சென்டர், கல்லூரி, அலுவலகம் இம்மாதிரியான இடங்களில் உங்களில் இவை கை கொடுக்கும்.

இந்த பதிவில் Firefox Portable Browser – ஐ பயன்படுத்தி உள்ளேன்.

டவுன்லோட் செய்த மென்பொருளை முதலில் Pen Drive க்கு Copy செய்து அதில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அது குறிப்பிட்ட மென்பொருள் பெயருடன் Portable என்று சேர்த்து ஒரு Folder ஆக Pen Drive – இல் இருக்கும். இப்போது நான் இன்ஸ்டால் செய்த Firefox கீழே உள்ளது.

அடுத்து Firefox Portable மீது கிளிக் செய்தால் Firefox மென்பொருள் ஓபன் ஆகி விடும். ஏற்கனவே நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள Firefox ஓபன் ஆகி இருந்தால் அதை Close செய்து விட்டு இதை ஓபன் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் போலவே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆம் அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இதில் நீங்கள் இயங்குவது History – இல் Save ஆகும், Bookmark செய்து கொள்ளலாம். எல்லாமே உங்கள் Pen Drive – இல் தான் ஸ்டோர் ஆகும். மீண்டும் வேறு கணினியில் பயன்படுத்தும் போது இதே History, Bookmark போன்றவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

என்ன மென்பொருட்களை பயன்படுத்தலாம் ?

இதில் எல்லா மென்பொருட்களையும் பயன்படுத்த முடியாத வசதி இருப்பினும் Chrome, Firefox, 7-Zip, Google Talk, FileZilla, Free Download Manager, GIMP, OpenOffice, LibreOffice, Inkscape, Skype, Sumatra PDF, TeamViewer, VLC, VirtualDub, WinRAR மற்றும் பல பயனுள்ள மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
பெரும்பாலான Open Source மென்பொருட்கள் Portable Version களை வழங்குகின்றன.

Portable மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய சிறந்த தளம் – Poratabe Apps
என்னென்ன மேன்பொருட்கள் என்ற லிஸ்ட் – List of portable software

(http://en.wikipedia.org/wiki/List_of_portable_software)

Computer Informations

உங்களது கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்:

மிகக் குறைந்த Hard Disk Space
நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.

Data Corruption
அதிக சூடாகுதல்
Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
Hardware Problems
Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.

Reboot :
 
உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space

இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.

Hard drive corrupted or fragmented

இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.

Run ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check

இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.
அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs
சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும்.

 CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab –இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig(http://www.anbuthil.com/2012/06/computer-start.html) என்ற பதிவை படிக்கவும்.

Virus பிரச்சினைகள்
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்
உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.

இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்
இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்
மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்

உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?(http://www.anbuthil.com/2014/08/How-to-buy-new-laptop.html) என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்
பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

Operation System இன்ஸ்டால் செய்தல்
மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்
மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.

பழைய கணினி
உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.

அவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பின் கீழே கேட்கவும்.

Computer Informations

தொலைக்காட்சி பிரியர்களுக்கு உதவும் சம்சுங்கின் புதிய அப்பிளிக்கேஷன்:

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஸ்மார்ட் கைப்பேசிகளைக் கொண்டே அதிகளவான மனித செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதற்காக அன்றாடம் பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனம் SleepSense எனும் புதிய அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இரவு நேரங்களில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கையில் நித்திரைக்கு செல்லும் நேரங்களை அறிந்து குறித்த நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை தானாகவே நிறுத்திக்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது மொத்தமாக நித்திரை செய்யும் நேரம், தூக்கத்தின் திறன், நித்திரை செல்ல எடுக்கும் நேரம், நித்திரையில் இருந்து விழிக்கும் தடவைகள், படுக்கையை விட்டு அகலும் தடவைகள், கண்ணிண் அசைவுகள் மற்றும் ஆழ்நித்திரையின் சதவீதம் என்ற 7 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்துவதற்கான நேரத்தை துல்லியமாகக் கணிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.