Friday, October 16, 2015

Computer Informations

தொலைக்காட்சி பிரியர்களுக்கு உதவும் சம்சுங்கின் புதிய அப்பிளிக்கேஷன்:

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஸ்மார்ட் கைப்பேசிகளைக் கொண்டே அதிகளவான மனித செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதற்காக அன்றாடம் பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனம் SleepSense எனும் புதிய அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இரவு நேரங்களில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கையில் நித்திரைக்கு செல்லும் நேரங்களை அறிந்து குறித்த நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை தானாகவே நிறுத்திக்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது மொத்தமாக நித்திரை செய்யும் நேரம், தூக்கத்தின் திறன், நித்திரை செல்ல எடுக்கும் நேரம், நித்திரையில் இருந்து விழிக்கும் தடவைகள், படுக்கையை விட்டு அகலும் தடவைகள், கண்ணிண் அசைவுகள் மற்றும் ஆழ்நித்திரையின் சதவீதம் என்ற 7 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்துவதற்கான நேரத்தை துல்லியமாகக் கணிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment